இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு

இஸ்ரேலும் ஹமாசும் மேலும் இரண்டு நாட்கள் மோதல் இடைநிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியுள்ளன.

நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாகவும் இதுவரை ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்