
காத்தான்குடி பிரதேச மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தும் புத்தாக்கக் கண்காட்சி
-காத்தான்குடி நிருபர்-
காத்தான்குடி கோட்டத்தின் காணப்படும் பிரதேச பாடசாலை மாணவர்களின் “கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி” எனும் தொனிப்பொருளிலான கோட்ட மட்ட புத்தாக்கக் கண்காட்சி நிகழ்வு காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இப் புத்தாக்கக் கண்காட்சி நிகழ்வினை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சியின் மூலம் காத்தான்குடி பிரதேச மாணவர்களின் புத்தாக்கமும், கண்டுபிடிப்பு ஆற்றலும் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இப்புத்தாக்க கண்காட்சியானது நேற்று பாடசாலை மாணவர்களின் பார்வைக்காகவும், இன்று செவ்வாய்க்கிழமை பொது மக்கள் பார்வைக்குமாக இரண்டு தினங்கள் இடம்பெற இருக்கினறமை குறிப்பிடத்தக்கது.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

