
போதைப்பொருள் வாங்க பிள்ளைகளை விற்ற பெற்றோர்
இந்தியாவின் மும்பை பகுதியில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைகளை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ளனர்.
முப்பையை சேர்ந்த ஷபீர் மற்றும் சானியா கான் என்ற தம்பதியினரே இவ்வாறு குழந்தைகளை விற்றுள்ளனர்.குழந்தைகளை விற்று போதைப்பொருள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். சம்பவம் குறித்து தம்பதியின் குடும்பத்தினர் அறிந்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து ஷபீர்கான், அவரது மனைவி சானியா, உஷா ரத்தோர், ஷகீல் மக்ரானி ஆகியோர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
