
தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தின் முக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அதன் படி நித்தியா நந்தன் இந்திர குமார் (பிரசன்னா – ரெலோ அமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்), தர்ம லிங்கம் சுரேஸ்(மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய ஐக்கிய முன்னனி மாவட்ட அமைப்பாளர், சபாரத்தினம் சிவயோக நாதன் அல்லது சீலன்(மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சிவில் அமைப்பு தலைவர்), தியாக ராஜா சரவணபவன்(முன்னாள் மாணகர சபை முதல்வர், மட்டக்கப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொது இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தும் பெயர் குறிப்பிடாத நபர்களும் உள்ளடங்குவர்.
மேலும் விமலசேன லவக்குமார், சின்னதம்பி காஞ்சிநிதி, கந்த சாமி சுப்பிரமணியம், தர்மலிங்கம் சுரேஸ், கணபதிபிள்ளை பாலசந்திரன், சீனிதம்பி யோகேஸ்வரன், குனசேகரம் அரவிந்தன், பாக்கிய செல்வம் அரியேந்திரன்,சின்னதுரை புஸ்பலிங்கம், முத்து பிள்ளை முரளிதரன், நாகலிங்கம் சங்கர பிள்ளை, பாலசிங்கம் முரளிதரன், ரி.சரவணபவன், நிர்மல குமார் நிதர்சன், வடிவேல் பிரதீபன், ஞானமுத்து சிறிநேசன், ராசமாணிக்கம் சாணக்கியன், சங்கரபிள்ளை நிர்மலன், செல்வராஜ் கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் போன்றோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



