
திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா
-கிண்ணியா நிருபர்-
திஹாரிய அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையின் பரிசளிப்பு விழா அதிபர் ஏ.ஜே.எம்.புர்க்கான் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
குறித்த விழாவிற்கு பிரதம அதிதியாக மேல்மாகாண கல்விச் செயலாளர் சிரிசோம லொகுவிதான, சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் மேல் மாகாணம் ஏ.ஏ.டி.என்.சீ.விஜேதுங்க , கம்பஹா வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.ஏ.பிரேமலால் ,கம்பஹா, களனி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் எம்.டி.எம்.தௌசீர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் 2022 உயர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர்களும், அகில இலங்கை, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேல் மாகாண செயலாளரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற பேன்ட் வாத்திய இசைக் கருவிகளும் அவரின் கரங்களால் கையளிக்கப்பட்டது.
வருகை தந்த பிரதம அதிதிகளை பழைய மாணவர் சங்க பிரதிரிதிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் இணைந்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




