சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாகவும் நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இன்னும் ஓரிரு வாரங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீவிர முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்