
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று நேற்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லேரியாவைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்திரியாவுக்குச் செல்ல முற்பட்டபோதே சந்தேக நபர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் பொரளையில் உள்ள தரகர் மூலம் பெறப்பட்ட போலி விசா ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
