பெண்களுக்கு எள் தரும் பயன்கள்

இயற்கையானது நம்முடைய ஆயுளைக் கூட்டி நம்மை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல்வேறு இயற்கை மருத்துவக் குணம் கொண்ட உணவுகளை நமக்கு வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைக்கு எள்ளினுடைய பயன்பாடு அதன் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கு எந்தவகையில் உதவுகின்றது என்பதைத்தான் இக்கட்டுரை கூறுகின்றது.

எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல வகைகள் அறியப்படுகின்றன. இத்தகைய எள்ளானது உடலை உரமாக்கும் , சிறுநீரினைப் பெருக்கும், பால் பெருக்கம், மலமிளக்கும்  என தகவல்கள் காணப்படுகின்றது.

காலையில் ஒரு பிடி எள்ளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் தரக்கூடியதாக இருக்கும் என பண்டைக்கால மருத்துவம் கூறுகின்றது.

கண் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாக இந்த எள் உதவுகின்றது. ‘ இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழி கூட இன்னும் வழக்கத்தில் காணப்படுகின்றது. இந்த எள்ளிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்தான் நாம் பயன்படுத்துகின்ற நல்லெண்ணெய் ஆகும்.

இத்தகைய எள்ளானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கரப்பை அதிகரிக்க உதவுகின்றது. இவர்கள் தினமும் 5கிராம் அளவு எள்ளைக் காலையில் உண்ண வேண்டும். மேலும் உள் உண்ணெயை 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் சிறிது நேரம் தேய்த்து ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்புஇ கண் வலி குறையும். உள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்டினால் கண்பார்வை தெளிவடையும்.

பெண்கள் தமது கர்ப்ப காலத்தில் அதிகளவு எள் சாப்பிடுவது கருச்சிதைவை தூண்டும் பழங்காலத்தில் இது ஒரு இயற்கை முறையான கருத்தடை முறையாகவும் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உள் உண்ணெயானது பெண்களுக்கு ஆரோக்கியமான கூந்தலை வழங்கவும் உதவுகின்றது. இந்த எள் எண்ணெயானது, விற்றமின் E உள்ளிட்ட போசணைகளால் நிறைந்துள்ள எண்ணெய் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மேலும் பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால்இ மார்பகப் புற்று நோய் செல்கள் வளர விடாமல் பாதுகாப்பதாக தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். மார்பகப் புற்றுநொய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்று நோய் போன்றவற்றையும் இது தடுக்கின்றது. கொழுப்பை வெளியேற்றி சுத்தமாக வைத்திருக்கின்றது. வெள்ளை எள்ளை விட கறுப்பு எள்ளே அதிக ஊட்டச் சத்துக்களும் , தாதுக்களும் கொண்டதாக காணப்படுகின்றது.

தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகள் சாப்பிட்டு வருவதன் மூலம் குடல்சார்ந்த பிரச்சினை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணிகளைச் செய்கிறது. முக்கியமாக பெண்களுக்கு உடல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் திடமான உடலுக்காகவும் பெண்களின் பூப்பெய்த காலங்களில் உண்ணுவதற்கு வழங்கப்படுகின்றது.