தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தூக்கம் என்பது எந்தவொரு உயிரினத்தாலும் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு சாப்பாடு தூக்கம் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

மனிதனுக்கு ஆரோக்கியமான சாப்பாட்டு பழக்கவழக்கங்கள் எந்தளவுக்கு முக்கியமோ அதே போன்றுதான் ஆரோக்கியமான தூக்கமும் அவசியமாதொன்றாகும்.

அந்தவகையில் எந்த நேரத்திலும் தூங்கிக்கொண்டிருப்பது சிறந்ததுமில்லை. காரணம் நம்முடைய உடலில் பல்வேறுபட்ட செல்கள் காணப்படுகின்றன. உடலினுள் பல்வேறுபட்ட செயற்பாடுகளும் காணப்படுகின்றன. அவற்றினை சரியான முறையில் பேண தூக்கமானது மிகவும் அவசியமாகும்.

தூக்கம் வராமல் இருப்பதற்கு காரணம்

1. நாம் தூங்கும் அறையில் முழுதாக இருள் இல்லாமல் இருந்தால் ஆழ்ந்த உறக்கம் வராது. கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும் நம் மூளை இது விழித்து இருப்பதற்கான நேரம் என்று முடிவு செய்து விடும். மெலடோனின் எனப்படும் தூக்கத்தை உருவாக்கும் ஹார்மோன் வெளிச்சமாக இருந்தால் குறைவாகவே சுரக்கும். அதையும் மீறி சோர்வின் காரணமாக நமக்கு தூக்கம் வந்தாலும் அது ஆழ்ந்த உறக்கமாக இருக்காது.
2. சிகரெட், மது போன்றவை ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கும்.
3. இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த உறக்கம் வராது.
4. சிலர் உறக்கம் வரும் வரை டிவி பார்த்து விட்டு உறங்குவர். அவ்வாறு உறங்கும் போது அந்த உறக்கம் ஆழந்த உறக்கமாக இருக்காது.
5. அறையின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் வராது. உடலின் வெப்பநிலையை விட குறைவான குளிர்ச்சியான சூழ்நிலையில் ஆழந்த உறக்கம் இருக்கும்.

பொதுவாக சிலர் சாப்பிட்டதுடன் தூங்கிவிடும் பழக்கம் உண்டு. ஆனால் அது ஆரோக்கியமானதல்ல. எப்போதும் சாப்பிட்டதும் தூங்க செல்லக் கூடாது. நம்முடைய இரவு உணவுக்கும் படுக்ககைக்கும்மிடையே குறைந்தபட்ச இரண்டு மணிநேர இடைவெளி இருப்பது சிறப்பு.

இல்லையெனில் அது ‘ஆசிட் ரிஃப்ளக்ஸ்’ என்ற பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். உணவு உண்ட பின்னர் சிறிது நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறப்பு. இதனால் விரைவில் ஜீரணம் ஆவதற்கு வாய்ப்புண்டு.

மேலும் உறங்கும் பொது எப்போதும் இடப்பக்கமாக சாய்ந்து தூங்கும்போது நம்முடைய குடற்பகுதியில் உள்ள அமிலங்கள் மேலே ஈர்ப்பு விசைக்கு எதிராக செல்லாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால், அமிலத்தால் ஏற்படும் கெட்ட விளைவுகள் எதுவும் ஏற்படாது. நாம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆவதற்கும் உதவும். அதேபோல மூளை நலனுக்கும் இது உதவுகின்றது. குறட்டை விடுதல் மற்றும் தூக்கத்தில் வாய் உலருதல் போன்றவற்றை குறைக்கின்றது. மேலும் இதயத்தின் சீரான ரத்தவோட்டத்திற்கு உதவுகின்றது.

நம்முடைய முன் புறம் மற்றும் பின்புறம் தூங்குவதனால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பின்புறமாக படுத்து உறங்குவதால் நமது உடலில் சுரக்கும் அமிலங்கள் மீண்டும் தொண்டை பகுதிகளுக்குள்ள் நுழைந்து நெஞ்செரிச்சல் மற்றும் உணவுக் குழாயில் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. அதேசமயம் உங்களுக்கு ஏற்கனவே பின்பக்க வலி போன்றவை இருந்தால் அவற்றை அதிகரிக்கும்.

அதேபோல வயிற்றின் மீது தூங்குபவர்களுக்க ஏற்கனவே ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினை இருந்தால் அதன் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். அதேபோல சாப்பிட்டதுடன் வலது பக்கம் தூங்குவதும் அஜீரண கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றன.

ஆகவே உறக்கத்தை சரியான முறையில் கையாண்டால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.