இலங்கை குழந்தைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கும்பல்

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கையை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பெண்ணான கே. பிரியங்கிகா சாமந்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்