ஒருவருக்கு 1 கிலோ சீனி மட்டுமே

லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு காரணமாக வெள்ளை சீனி கிலோ கிராம் 275 ரூபாவுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு 275 ரூபாவில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் எனவும் சிவப்பு சீனி கிலோ 330 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை சில லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்