
சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி
உஸ்ஸாபிடிய, உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் லொறி மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர (வயது – 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மின்சார சபையின் உப ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளான்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்பொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
