துறைமுகத்தில் தீ விபத்து: படகுகள் தீக்கிரை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகுகளில் காணப்பட்ட டீசல் மற்றும் எரிவாயு கொள்கலன்கள் மூலம் அரை மணி நேரத்தில் தீ வேகமாக பரவி, மற்ற படகுகளுக்கும் தீ பரவிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
எவ்வாறாயினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டிருக்கலாமென மீனவர்கள் சந்தேகிக்கிப்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.