
இ.தொ.கா பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
பதுளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் ஒன்றை இன்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், சம்பள உயர்வுக்கான முன்மொழிவுகள் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய சம்பள உயர்வு முன்மொழிவுகள் மற்றும் தற்போதைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அசோக்குமார், சிவலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
