நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.