
ஜனாதிபதியின் ஊடக பிரிவை சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
ஜனாதிபதியின் ஊடக குழுவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதியின் ஊடக குழுவைச் சேர்ந்த பலர் நாடு திரும்பியதாகவும் அதே வீசாவை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் மேலும் கேள்வி எழுப்பியதாவது, ஜனாதிபதியின் ஊடகவியலாளர் குழுவின் பணியாளர்களுக்கு நாட்டில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டில் உள்ள ஏனைய மக்களின் நிலைமை என்னவாகும்?
ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, எனினும் அது நெறிமுறைக்கு புறம்பானது என்பதால் அதனை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
