எட்டுவயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இராணுவ வீரர் கைது

கம்பஹா பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரந்துடுவ பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நவம்பர் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விடுமுறையில் வீடு சென்றிருந்ததாகவும், விடுமுறையில் சென்ற போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியதாகவும் தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்