பேருந்து விபத்து : நடத்துனர் படுகாயம்

தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெனியாய – கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ பொதுப்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பேருந்து விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் என்பன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.