பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்

தெனியாய – கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ பொதுப்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மின்கம்பம் மற்றும் தொலைபேசி கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பேருந்து நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்