
வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி
-பதுளை நிருபர்-
மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பொலிஸார் சார்ஜன்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை, தம்பர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மஹியங்கனை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் டி.எம்.எச்.உதயகுமார (வயது – 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது கடமைகளை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, நேற்று இரவு 8:30 மணியளவில் மஹியங்கனை அலவெல “ஹிமான்சா” ஹோட்டலுக்கு அருகில் வீதியில் சென்ற நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.பிரபோப சந்தன விரசிங்க தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
