மனைவியை காணவில்லை கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வீட்டிலிருந்து கடந்த 8ஆம் திகதி தனது மனைவி நண்பகல் 1 மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி (வயது 31) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0770780766 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.