சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் “ஓபன் டே” நிகழ்வு

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் ஓபன் டே நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ் தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு சம்மாந்துறை கல்வி வலயம் கல்முனை கல்வி வலயம் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயம் ஆகிய மூன்று கல்வி வலயங்களிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும் பாலமுனை விவசாய கல்லூரி மாணவர்கள் மற்றும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கற்று வெளியேறிய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் விவசாய உயர் டிப்ளோமா மாணவர்களினதும் ஓட்டோ மொபைல் டிப்ளோமா மாணவர்களினதும் விவசாய டிப்ளோமா மாணவர்களினதும் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பிரதி அதிபர் யு கம்சாவின் தலைமையில் ஓட்டோ மொபைல் மாணவர்களினது ஆக்கங்களும் விவசாய பகுதித் தலைவர் வரகுணராகவன் தலைமையில் விவசாய பகுதி மாணவர்களின் ஆக்கங்களும் காட்சிப்படுத்த வழிநடத்தப்பட்டிருந்தது.

இங்கு கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

அத்துடன் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள அனைத்து கற்றைநெறி மாணவர்களினதும் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.