
முச்சக்கரவண்டி கடத்தல்: சாரதிக்கு நேர்ந்த கதி
பின்வத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வாலியதல்பிட்டிய பிரதேசத்திற்கு ஒருவர் வாடகைக்கு செல்வதாக கூறி அதில் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ள நிலையில் மேலும் இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளனர்.
பின்னர் இவர்கள் மூவரும் பின்வத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி சாரதியை இறங்குமாறு வற்புறுத்திய நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதியின் வயிற்றிலும் மார்பிலும் குத்தி காயப்படுத்தி விட்டு முச்சக்கரவண்டியை கடத்தி சென்றுள்ளனர்.
காயமடைந்த சாரதி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
