
விளையாட்டுதுறை அமைச்சருக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு
விளையாட்டுதுறை அமைச்சர், தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ள நிலையில், அவருக்குபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களிற்காக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஏழு பேரை தனது பாதுகாப்பிற்கு பயன்படுத்துவதற்கு அமைச்சருக்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள நிஹால் தல்துவ, அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்ற தகவல்களால் அமைச்சரின் பாதுகாப்பிற்கான மேலும் மூவரை நியமித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
