ஒரின பாலியல் துஸ்பிரயோகம்: ஆசிரியர் கைது

முல்லைத்தீவு – நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் ஆசிரியர் ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணித பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணித பாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக இவர் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தி வரும்கிறார். இதன்போது தன்னிடம் கல்வி கற்றுவரும் ஆண் மாணவர்களை ஓரின பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையம், மற்றும் பிரதேச செயலகத்தில் முறையிடப்பட்ட போதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தனியார் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன், இது தொடர்பிலான சட்டவைத்திய பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணைகள் என்பன தற்போது இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்