
பயிற்சியாளர் மற்றும் மாணவர்களை தாக்கிய நான்கு பேர் கைது
இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் பயிற்சியாளர் மற்றும் இரண்டு மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
சீவாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குறித்த குழுவினர் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களை தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை தாக்கிய நான்கு சந்தேக நபர்களும் புதன்கிழமை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி மற்றும் ரம்புக்கனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28 மற்றும் 48 வயதுடையவர்கள்.
சந்தேக நபர்களில்இ இருவர் தடகள சங்கத்தின் உறுப்பினர்கள்இ மற்றொருவர் மாவட்ட அளவிலான தடகள பயிற்சியாளர்.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
