காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது

கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 11,320 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 4,650 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, 29,200 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.