பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள பிரதான இரயில் நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு 10:30 மணியளவில் பிரதான இரயில் நிலையத்தில் நான்கு பேர் பொருட்களை சேதப்படுத்தி மக்களை துன்புறுத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது, இதையடுத்து இப்பகுதிக்கு சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினரே இருவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது 29 வயதான சுவிஸ் நபர் ஒருவர் பொலிசார் மீது ஆக்ரோஷமாக நடந்து கொண்டதோடு, பொலிசாரின் அடையாள சோதனையை தடுக்க முயன்றுள்ளார் மற்றொரு 20 வயதான சுவிஸ் நபர் பொலிஸ் அதிகாரியை ஆக்ரோஷமாக தாக்க முற்பட்ட போது இருவர் மீதும் பெப்பர் ஸ்பிரே (மிளகு திரவம்) பயன்படுத்தப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு , அதிகாரப்பூர்வ சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதானவர் மீது வன்முறை மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டும் மற்றும் 20 வயது இளைஞன் உத்தியோகபூர்வ கடமையை தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.