
மூளை காய்ச்சலால் உயிரிழந்த கிராம சேவகர்
யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.புத்தூர் கிழக்கை சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தன்று தனது வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து அவர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையின் போது மூளை காய்ச்சலால் மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
