சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நகைக்கடையில் கொள்ளை

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் (Visp) பகுதியில் உள்ள நகைக் கடையொன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாநில பொலிசார் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

விஸ்ப் பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றினூள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி இங்கிருந்த ஒருதொகை பணத்தையும் ஒருதொகை ஆபரணங்களையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியை அண்மித்த பகுதிகளில் பொலிசார் பாரிய வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் , இதனால் சுமார் 2 மணித்தியாளங்களுக்கு மேலாக வீதி போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன.