சுவிட்சர்லாந்தில் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை?
சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலையடி வாரங்களில் இன்று செவ்வாய்க்கிழமை பெய்துவரும் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த சில பகுதிகளில் காற்றின் வேகம் 100 கிலோமீற்றர் வரை உள்ளதாகவும், லவுஸான் மாநிலத்தில் லா டோலி பகுதியில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் நீர்நிலைகளில் நீர்மட்டம் தீடிரென அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வலே மாநிலத்தின் லுகர்பாட் பகுதியில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலபகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் , நீர்நிலைகளை அண்மித்துள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.