இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 24 கரட் பவுண் தங்கம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் பவுண் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.