ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த அரசமரம்

-யாழ் நிருபர்-

ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் மேற்கு, சங்கானை – வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்று திங்கட்கிழமை இரவு  தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது.

இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.