பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் குளியலறையில் தவறாக நடந்து கொண்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயிலுனர்  கான்ஸ்டபிளிடம் ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரான குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான குறித்த கான்ஸ்டபிளையும் பயிற்சி கான்ஸ்டபிள் ஒருவரையும் ஒன்றாக குளியலறையில் பார்த்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக களனி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையையடுத்து நேற்று திங்கட்கிழமை முதல் இந்த பணித்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.