வீட்டைவிட்டு வெளியேற முயன்ற சிறுவன் மாடியில் இருந்து விழுந்து படுகாயம்
பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரளையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக இரும்பு கிரில்களின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
