
தரையிறக்க முடியாமல் யாழ் விமான நிலையத்திலிருந்து சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வந்த விமானம் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.
