சுவிட்சர்லாந்தில் 34 வயதுடைய இலங்கையரின் சடலம் மீட்பு
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்தில் 34 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடைய சடலம் திங்கட்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை நள்ளிரவு வீன்ஃபெல்டனில் (Weinfelden) பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் தொடர்பாகவும் , மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் பொலிசார் இதுவரை எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.
நள்ளிரவு 1 மணியளவில், பிராந்திய பொலிஸ் ரோந்துப் பிரிவினரே பயிர்செய்கை நிலப்பரப்பிற்கு அருகாமையில் சடலத்தை மீட்டுள்ளதாகவும் , உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடையவர் என மட்டும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார் என, பொலிஸ் இணையத்தள செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தடயவியல் பிரிவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். தடயவியல் மருத்துவ பிரிவிற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் . அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.