Last updated on November 13th, 2023 at 02:33 pm

11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை

11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரச பாடசாலையில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது 6ஆம் தர மாணவியே இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார்.

கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டதையடுத்து அவரை பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் தனது பாடசாலையின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனை யாரிடமும் சொல்லமுடியாமல் அந்த மாணவி மறைத்து வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குண்டேய் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொலிஸார் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்