நச்சு இரசாயனத்தை உள்ளடக்கிய பாகிஸ்தானின் மிளகாயை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஃப்லாடாக்சின் என்ற நச்சு இரசாயனத்தை உள்ளடக்கிய ஒரு தொகுதி மிளகாய் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையின் பின்னர் 25 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தவிர, அஃப்லாடாக்சின் என்ற நச்சு இரசாயனம் இருப்பதால், ஏராளமான மக்காச்சோளமும் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.