நீச்சல் தடாகத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின்  நீச்சல் குளத்தில் விழுந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய போது விடுதியின் நீச்சல் குளத்தில் குழந்தை இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொட கெடவலமுல்ல பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை  பெந்தோட்டை கொம்மால பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெற்றோருடன் தங்கியிருந்த வேளை இவ் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்