மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை கையளிப்பு
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களுக்கான பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரினால் அமைக்கப்பட்ட குறித்த ஓய்வு நிழல் குடை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
பின்னர் தொடராக இடம்பெற்ற நிகழ்வில் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.குறித்த வரவேற்புரையினை தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் அதிதியாக மௌலவி எஸ்.எம் நிம்ஸாத் பாடசாலை பிரதி அதிபர் ஏ.எஸ். சலாம் உதவி அதிபர் திருமதி இ.றினோஸ் ஹஜ்மீன் யு.எல். ஹிதாயா பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்