இன மத ரீதியான பாகுபாடே இலங்கை துடுப்பாட்ட அணியின் தோல்விக்கான காரணம்

இலங்கை துடுப்பாட்ட அணி தொடர் தோல்விகளை சந்திப்பது இன மத ரீதியான வேறுபாடே காரணம் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை துடுப்பாட்டு சங்கம் திறமையான துடுப்பாட்டு வீரர்களை இனரீதியாக அல்லது மத ரீதியாக புறக்கணித்து வருகிறது வடகிழக்கு மாகாணங்களில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள இனவாத அரசியல்வாதிகளே பின்புலத்தில் இருந்து வருகின்றனர் என மேலும் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் தற்போது இலங்கை துடுப்பாட்ட சங்கத்தின் விடையங்கள் தொடர்பில் பேசப்படுகின்றது எனவே எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

இலங்கை துடுப்பாட்ட சங்கம் எதிர்வருகின்ற காலத்தில் வட கிழக்கிலிருந்து திறமையான வீரர்களை தெரிவு செய்து இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்குள் உள்வாங்க வேண்டும் என்றும் இவ்வாறான விடயங்களில் அரசியல் பிரயோகங்களையும் இன மத வேறுபாடுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்