
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை இரவு 11.30 மணி தொடக்கம் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

