20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
நாட்டில் எஞ்சியுள்ள மருத்துவர்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
குறித்த மருத்துவர்களுக்கு பொருத்தமான சூழலை உருவாக்கி வழங்குவதன் மூலம் இலவச சுகாதார அமைப்பு மற்றும் வைத்தியசாலைகளை பாதுகாக்க முடியும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரத் துறையானது அண்மைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், , தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளின் விபரங்களை வழங்கியுள்ளது
குறைந்தது 20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன, 95 மருத்துவமனைகளின் சிறப்புப் பிரிவுகள் மூடப்படும் நிலையில் உள்ளது, 150 மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, 167 மருத்துவமனைகள் சேவை துண்டிக்கப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்கின்றன, என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்