அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று புதன்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும் என ஹோமாகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அஞ்சல் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள இந்த பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றதாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.