வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடத்தில் இதுவரையில் இலங்கைக்கு 11 இலட்சத்து 47 ஆயிரத்து 657 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மூவாயிரத்து 866 பேர் வந்துள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியிலிருந்தும் இரண்டாயிரத்து 11 பேரும், பிரித்தானியாவிலிருந்து ஆயிரத்து 539 பேரும் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்