மணல் ஏற்றிய நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது

-யாழ் நிருபர்-

 

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில், அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேரத்தில் கல்லாறு, புளியப்பொக்கணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளப்பின் போது நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட 4 டிப்பர் வாகனங்கள்  இன்று புதன்கிழமை  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்