வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படுத்தலும், கண்காட்சியும்

-யாழ் நிருபர்-

வடக்குஇ கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கை வடக்குஇ கிழக்கு மாகாணத்தின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) தோற்றம் பெற்று ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படுத்தலும், கண்காட்சியும் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.

ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு பிரதான சுடர்கள் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்டங்கள் தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்களால் பிரதான சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

வடக்குஇகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் யக்ஸ்சன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா வடமாகாண தலைமை அமைப்பாளர் கண்டுமணி லவகுசா வடக்கு கிழக்கு மாகாணத்தின் 08 மாவட்ட தழுவிய சிவில், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்