கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் விட்டமின் சி, விட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது விட்டமின்-சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிரஇ கொய்யாவில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் என ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, சத்தான கூறுகள் நிறைந்த கொய்யா வயிறு தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க எப்படி பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை எப்படி உட்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வயிற்றுக்கு நல்லது :
கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.
மலச்சிக்கலை போக்கும் :
நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும்போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
அமிலத்தன்மை நீக்க உதவும் :
கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.
மூலத்திற்கு நல்லது :
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.
மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.கொய்யாவை எப்போது சாப்பிட வேண்டும்..? மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்