ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர மாணவர்

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவைபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்